உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில், அரிமா சங்கம் மற்றும் முக்தி M.S. டட்டா அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் பொருத்து முகாம் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமின் இரண்டாம் நாள் துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் முகமது கனி அமிர்த கண்டிசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். மேலும், முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக்குமார் சோர்டியா, லயன் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஆனந்த், பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், விபத்துகள் மற்றும் பிற காரணங்களால் கால் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலவச செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பயனாளிகள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் நடந்து, இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சமூக நலன் மற்றும் மனிதநேய சேவைகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வரும் அரிமா சங்கம் மற்றும் முக்தி M.S. டட்டா அறக்கட்டளையின் இந்த முயற்சி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

No comments:
Post a Comment